-
-
உனக்கு 32 எனக்கு 22
Unakku 32 Enakku 22
Author: Chittoor Murugesan
Publisher: Self Published on Kinige
Pages: 263Language: Tamil
“பெண்ணாகி ஆணாகி அலியாய் பிறங்கு ஒளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறு ஆகி கண்ணார் அமுதமுமாய் நின்றான் “
“முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன். ஆணாகி பெண்ணாகிநின்றானவன். அவை ஒன்று தானென்று சொன்னானவன்”
“ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்னஎல்லாம் ஓர் இனம் தான்”
இந்த வரிகளை படித்து தமிழர் பண்பாடு தமிழ் கலாச்சாரம் என்று ஷோல்டரை தூக்காதீர்கள்.
இவை எல்லாமே ஒப்பனைகள் கற்பனைகள் .ஆதி மனிதன் மட்டுமே அல்ல சமகால மனிதனும் மிருகம் தான். அன்றைய ஆதிமனிதன் தன் நிர்வாணம் உட்பட எதையும் மறைத்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்தான்.
இன்றைய மனிதன் நிர்வாணத்தோடு தன்னுள் சதா உறுமும் மிருகத்தையும் ஒளித்து வைத்திருக்கிறான் மனிதனை மிருகமாக்கும் இரண்டு காரணிகளில் ஒன்று பசி அடுத்தது காமம் .
இன்றைக்கும் பிடி சோற்றுக்கு ஏங்கும் அடிமைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதே சமயம் பசுமை புரட்சி இத்யாதிக்ள் மினிமம் கியாரன்டியை கொடுத்து விட்டதால் காமம் ஒன்றே மனிதனுக்குள்ளான மிருகத்தை போஷிக்கிறது.
