-
-
பராசக்தி
Parasakti Tamil
Publisher: Self Published on Kinige
Pages: 238Language: Tamil
மனித உடலுக்குள் குண்டலினி சக்தியாக உறைந்துள்ள பிரபஞ்ச சக்தியை எழுப்புதல், நவீன அறிவியலின் பகுத்தறிவு ரீதியிலான விளக்கங்களுக்கு பிடிபடாத ஓர் அபூர்வ நிகழ்வாகும்.நூலாசிரியர் இந்த சக்தியை எழுப்புவதில் தமக்கு ஏற்பட்டஅனுபவங்களை இந்நூலில் விளக்கமாக விவரித்துள்ளார்.
மனித உடலுக்குள் குண்டலினி சக்தியை எழுப்பும்போது என்ன நிகழ்கிறது என்பது குறித்த வியப்பூட்டும் பல உண்மைகளை இந்நூல் வாசகர்களுக்கு வழங்குகிறது. அந்த வகையில் இந்நூலின் சில பகுதிகளில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வேறெங்கும் காணக்கிடைக்காதவை மற்றும் உள்ளபடியே அதியாச்சரியமானவை. மனிதகலம் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை எழுப்பு வ’ரும் ஆழமான சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் முயற்சியாகவும் இந்நூல் அமைந்துள்ளது.
இந்நூலில் அடங்கியுள்ள தகவல்கள், மதம், மொழி, தத்துவம், கலாச்சாரம், கல்வி, தொழில் பொன்ற எல்லா வித்தியாசங்களுக்கும் அப்பாற்பட்டு மனித குலம் முழுவதற்கும் ஏற்றதாகும். நிரந்தர மகிழ்ச்சி மற்றும் நிம்மதியை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இந்நூல் வெளிப்படுத்தும் ரகசியங்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
